அப்பாடா, ஒரு வழியா ஒரு முழு மாத சம்பளம் வாங்கியாச்சு! வேலை செய்யறோமோ இல்லையோ இதெல்லாம் கரெக்ட்டா செஞ்ஜுடுவோமில்ல. போன கம்பெனி போல தமிழர்கள் யாரும் இங்கு இல்லை. சில கேரளா நண்பர்கள், மற்றவர்கள் எல்லாம் வட இந்தியர்கள். முழுசாக புரியவில்லை என்றாலும் அவர்கள் பேசும் இந்தி சுமாராக புரிகிறது.
ஆபீஸில் இருந்து இருக்கும் இடம் சுமார் 6 கி.மி. நம்ம ஊரு டாக்ஸி மாதிரி இங்கே தனியார் வாகனங்கள் 4,5 பேரை ஏற்றிக்கொண்டு அவரவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடுகிறார்கள்.டாக்ஸியில் ஏறும் எவரும் அறிமுகம் இல்லாதவர் என்பதால், பயணத்தின் போது ஒரு மயான அமைதி நிலவும். அரசாங்கத்தின் பஸ்ஸும் உண்டு. நம்ப ஊர் வேன் மாதிரி உள்ளது.2 ரியால்(அதுதாங்க சவுதி நாணயம்) கொடுத்தால், அந்த பஸ் போகும் ரூட்டில் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். ஆனால் அவை பிரதான சாலைகளில் மட்டுமே செல்லும். நான் இருப்பது தலை நகரம் ரியாத்தில். இது சற்றே மலை போன்ற பகுதி. ஆகவே சற்று கூடுதல் வெய்யிலும் குளிரும் காணப்படும். ஏப்ரலில் இருந்து வெய்யில் காலம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். இப்பொழுது வெய்யில் சுமார் 40,41. ஜூலை ஆகஸ்ட்டில் 50 வரை போகும். ஹ்லோ, ஹ்லோ என்ன, படிச்சதுக்கே கூல்டிரிங்க் குடிக்க போனா எப்பிடி? சரி குடிச்சுட்டு வாங்க, நானும் போயிட்டு நாளைக்கு வரேன், வர்ட்டா
Monday, May 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வந்து எட்டிப்பார்த்துட்டேன் மணி, நான் புதிய வலைப்பதிவாளன் தான், ஜித்தாவில் இருக்கின்றேன்.
Post a Comment