அன்புள்ள இளையராஜா அவர்களுக்கு,
சவுதியில் இருந்து இப்பொழுதுதான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதுபோல உள்ளது. அதற்க்குள் ஒரு வருடம் எப்படி ஓடி விட்டது. இந்த ஒரு வருடம் உங்கள் இசையில் பாடல்கள் அதிகம் வெளி வரவில்லை எனினும், ஓராயிரம் ஆண்டுகள் நிலத்திருக்கும் வண்ணம் பல பாடல்களை கடந்த 32 வருடங்களாய் கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றி
கூறி நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
தினமும் 50 முதல் 100 பாடல்கள் வரை கேட்கும்(எல்லா மொழிகளிலும்) எனக்கு இளையராஜாவின் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.அற்புதமான பாடல் வரிகளும் அருமையான இசையும் சேர்ந்த ஒரு மெலடி இது. கடந்த சில மாதங்கள் தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்கிறேன்.இது பாகேஸ்வரி ராகம் என்று நினைக்கிறேன்.அந்த சந்தேகத்தை வல்லுனர்களிடம் விட்டுவிட்டு நாம் பாடலை ரசிப்போம்
http://www.youtube.com/watch?v=xnGxBxjbRmQ
Monday, June 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தாங்கள் இசை இன்பத்தில் எழுதலாமே?
தங்கள் வரவை எதிர்பார்க்கும்,
அன்புடன்,
ஜீவா
Post a Comment